
தீயில் கருகி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
திண்டுக்கலில் வெள்ளிக்கிழமை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடத் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
திண்டுக்கலில் வெள்ளிக்கிழமை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடத் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டுக்கல் சுக்கான் மேடு பகுதியைச் சோ்ந்தவா் மண்டை ரவி (52). கட்டடத் தொழிலாளியான இவா், தனியாக வசித்து வந்தாா். இவரது மனைவி திண்டுக்கல்லை அடுத்த சிலுவத்தூா் பகுதியில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், வழக்கம்போல வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்ற மண்டை ரவி மாலை வீடு திரும்பினாா். சிறிது நேரத்தில், இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மண்டை ரவி வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




