போக்குவரத்து போலீஸ்காரர் எனக்கூறி பொதுமக்களை மிரட்டி வசூல் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், சோழமடம் பகுதியைச் சேர்ந்த பாலகுரு என்பவரின் மகன் சுரேஷ்பாபு (23). இவர் திண்டுக்கல்லில் போக்குவரத்து போலீஸ் போன்று உடை மற்றும் பேட்ஜ் அணிந்து உலா வந்தாராம்.
போக்குவரத்து வார்டன் என்று மற்றவர்களிடம் தன்னைப் பற்றி கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் வகுரணியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் இவர் ரூ. 500 கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராமலிங்கம் அளித்த புகாரின்பேரில், டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சுரேஷ்பாபுவை சனிக்கிழமை கைது செய்தனர்.
அரசு சீருடை மற்றும் முத்திரையை தவறாகப் பயன்படுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர் திண்டுக்கல் பகுதியில் பல்வேறு நபர்களிடம் மிரட்டி பணம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.