பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: திருமாவளவன்

தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

Published On :

தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

அவனியாபுரத்தில் மறைந்த தலித் தலைவர் மலைச்சாமியின் 26ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனை தலித்துகளின் தேசிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தலித்துகளை காப்பது தமிழக அரசின் கடமையாகும். இந்தியா வரும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் இலங்கையில் தமிழர்கள் பகுதியில் தமிழர்களை மறுகுடியேற்றம் செய்து ராணுவம் மற்றும் அத்துமீறி குடியிருக்கும் சிங்களர்களை வெளியேற்ற பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும்.

கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரி சகாயத்துக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவரது அறிக்கை வெளிவந்தால் குவாரிகள் முறைகேடுகள் வெளிவரும். மக்கள் நல இயக்கம் மக்களுக்கான பல்வேறு போராட்டங்களைச் செய்யும் இயக்கமாகும். இதுவே தேர்தலுக்கான கூட்டணியாகவும் அமையும். தேர்தல் நேரத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

பின்னர் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் ஓம்சக்தி நகரில் கட்சிக் கொடியேற்றி அங்கு படிப்பகம் ஒன்றையும் திறந்து வைத்தார். முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் மேற்கு மாவட்டச் செயலர் ரா.அய்யங்காளை தலைமையில் வரவேற்பளிகப்பட்டது. இதில், மாவட்டச் செயலர் செல்லப்பாண்டி, இன்குலாப் உள்ளிட்ட கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.