மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மதுரை அரசு மருத்துவமனை பாதுகாப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி: சுகாதார துறைச் செயலர் ஆலோசிக்க உத்தரவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாதுகாப்பு குறித்து சுகாதாரத்துறை செயலர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டது.

Updated On :

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பாதுகாப்பு குறித்து சுகாதாரத்துறை செயலர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டது.

 மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள பொம்மனம்பட்டியைச் சேர்ந்த தினகரன் மனைவி மீனாட்சியின் குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் 2003 இல் காணாமல் போனது. இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் மனுவை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குரைஞர் ஆணையர்கள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். திங்கள்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, மருத்துவமனை டீன் ரேவதி கயிலைராஜன், காவல் துணை ஆணையர் சமந்த் ரோகன் ராஜேந்திரா, சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன் ஆகியோர் ஆஜராயினர்.

 அப்போது வழக்குரைஞர் ஆணையர்கள் தாக்கல் செய்த அறிக்கை: பிரசவ வார்டில் ஒரு பெண்ணுக்கு ஒரு பார்வையாளர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் ஒருவரைப் பார்க்க 3 முதல் 10 பேர் வரை அனுமதிக்கப்படுகிறது. அங்கு 2 காவலாளிகள் பணியாற்றுவதாகக் கூறப்பட்டது. ஆனால் நாங்கள் ஆய்வு செய்த போது ஒரு காவலாளி மட்டுமே பணியில் இருந்தார்.

 எனவே குழந்தைகள் வார்டில் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. மருத்துவமனையில் 16 சிசிடிவி காமிராக்கள் உள்ளதாகவும் அந்த காமிராக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறை மற்றும் துறை தலைவர்களுக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் சிசிடிவி காமிராக் காட்சிகள் தெளிவாக இல்லை. அதை யாரும் கண்காணிக்கவும் இல்லை. ஒரு இங்குபேட்டரில் 3 குழந்தைகள் வரை வைக்கப்பட்டிருந்தனர். குழந்தைகளின் கைகளில் கட்டப்பட்டுள்ள அடையாள பட்டை தரமானதாக இல்லை. மேலும் ஒரு தாய்க்கு அளித்த எண், குழந்தையின் அடையாள பட்டையில் காணப்படவில்லை.

 மருத்துவமனை பாதுகாப்புக்கு 44 போலீஸார் பணி அமர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு எஸ்ஐ மற்றும் 4 பெண் போலீஸார் தான் பணியில் உள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் நிறுத்தப்பட்டுள்ளன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 இது போன்று டீன் தாக்கல் செய்த அறிக்கையில், மருத்துவமனையில் தினமும் 40 பிரசவங்கள் நடக்கின்றன. மேலும் பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து சிக்கலான பிரசவங்கள் இங்கே அனுப்பப்படுகின்றன. பிரசவ வார்டில் தனியார் நிறுவன காவலாளிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். குழந்தை திருட்டை தடுக்க எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக குழந்தை திருட்டு நடக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

 இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பிரசவ வார்டில் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் குறைபாடுகள் உள்ளன. மேலும் சுகாதாரக் குறைபாடு இருப்பதும் தெரியவந்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மருத்துமவனையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. எனவே சுகாதாரத்துறைச் செயலர், மருத்துவமனை டீன், மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர் ஆகியோர் அக்.10 ஆம் தேதி விவாதித்து தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும். மருத்துவனையில் காணாமல் போன 13 குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை செயலர் குறிப்பிட்டுள்ளார். அதனால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து செப்.16 இல் அரசுத்தரப்பு பதிலளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

பிரசவ வார்டில் குரங்குகள்

வழக்குரைஞர் ஆணையர்கள் தங்கள் அறிக்கையில், பிரசவ வார்டின் ஜன்னல் உடைந்து உள்ளது. அதன் வழியாக குரங்குகள் உள்ளே வந்ததைப் பார்த்தோம். இதனால் அங்கு குழந்தைகளுக்கு ஆபத்தான சூழ்நிலையே உள்ளது எனக்குறிப்பிட்டுள்ளனர்.

பரிந்துரைகள் விவரம்: தரமான காமிராக்களை நிறுவ வேண்டும். குழந்தை திருட்டு தொடர்பான எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். பிரசவ வார்டில் 2 போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படவேண்டும். குழந்தைகள் கால்தடம் பதிப்பை கட்டாயப்படுத்த வேண்டும். தனியார் வாகனங்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது. குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் பட்டை தரமானதாக இருக்க வேண்டும். போலீஸ் கட்டுப்பாட்டு அறை 24மணி நேரமும் இயங்க வேண்டும் என பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.