நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

நரபலி புகார்: பிஆர்பி நிறுவன உரிமையாளர்கள், 3 பேருக்கு அழைப்பாணை

கிரானைட் குவாரியில் மனநலன் பாதிக்கப்பட்டோர் நரபலியிடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர்கள் மற்றும் 3 பேருக்கு போலீஸார் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

Updated On :

கிரானைட் குவாரியில் மனநலன் பாதிக்கப்பட்டோர் நரபலியிடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர்கள் மற்றும் 3 பேருக்கு போலீஸார் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

  கிரானைட் குவாரிகளில் மனநலன் பாதிக்கப்பட்டோர் நரபலி கொடுக்கப்பட்டதாகவும், அதில், இருவர் சடலங்கள் இ.மலம்பட்டி மணிமுத்தாறு கரையில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டதாகவும் கிரானைட் முறைகேடு விசாரணைக்கான சட்ட ஆணையர் உ.சகாயத்திடம், கிரானைட் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிய சேவற்கொடியோன் புகார் அளித்திருந்தார்.

  இதையடுத்து சேவற்கொடியோனிடம் வாக்குமூலம் பெற்ற இ.மலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இப்புகாரின்பேரில், பிஆர்பி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஜோதிபாசு, கிரேன் பராமரிப்பாளர் பரமசிவம், ஐயப்பன் ஆகியோர்  மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சந்தேக மரணம், தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.  மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சிபிஐ விசாரணை தேவை: "கிரானைட் தொடர்பான வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்திலேயே நரபலி புகார் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதை சட்டத்துக்கு உள்பட்டு உண்மைநிலையை வெளிப்படுத்துவோம்.

  இப்பிரச்னையை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும்' என பி.ஆர்.பி. நிறுவன தரப்பு வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.