தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களுக்கு வருமான வரி விலக்கு: உயர் நீதிமன்றம்

கத்தோலிக்க திருச்சபை பள்ளிகளில் பணிபுரியும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

கத்தோலிக்க திருச்சபை பள்ளிகளில் பணிபுரியும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளித் தாளாளர் நீல. சின்னராணி தாக்கல் செய்த மனு: கத்தோலிக்க திருச்சபைக்கு உள்பட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளில் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள், ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, கடந்த 1944ஆம் ஆண்டில் இருந்து வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், தற்போது இவர்களுக்கு வருமான வரி விதிக்க, முதன்மை தலைமை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதை ரத்து செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு, நீதிபதி பி. ராஜேந்திரன் முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கத்தோலிக்க திருச்சபைக்கு ஏற்கெனவே வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மனுவில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் தங்களின் ஊதியத்தை திருச்சபைக்கு அளித்து விடுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். திருச்சபைக்கு அவர்களின் ஊதியத்தை வழங்குவதை உறுதிமொழிப் பத்திரம் பெற்றுக்கொண்டு, வருமான வரி விலக்க அளிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.