மதுரை மாநகரில் சங்கிலிப் பறிப்புச் சம்பவங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குற்றப்பிரிவு துணை ஆணையராக(குற்றப்பிரிவு) பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மதுரை மாநகரக்காவல் துணை ஆணையராக இருந்த உமையாள் மாற்றப்பட்டு, திருச்சி மாநகரக் குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜெயந்தி நியமிக்கப்பட்டார். அவர் வெள்ளிக்கிழமை மதுரையில் பொறுப்பேற்றுக் கொண்டார். 1998-இல் குரூப் 1-இல் தேர்வு செய்யப்பட்டு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்துள்ளார். சேலம், திருச்சியில் குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
பொறுப்பேற்ற பின்பு துணை ஆணையர் ஜெயந்தி கூறியது: மதுரை நகரில் சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் அதிகம் நடப்பதாகக் கூறப்படுகிறது. குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவதும் உள்ளது.
நகரில் ஆள் நடமாட்டம் குறைவான அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இரு சக்கர வாகன ரோந்துப் பிரிவு அதிகரிக்கப்படும். பழைய குற்றவாளிகள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவர். குற்றவாளிகள் தப்பி விடாதபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பல்லோ மருத்துவமனை லாபம் 38.4% உயர்வு!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு லாபம் 39% உயர்வு!

இன்னா புள்ள படமா... கோலிவுட்டில் அறிமுகமாகும் இன்ஸ்டா புகழ் பாலமுருகன்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


