தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

பிளஸ் 2, 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்கள்

மதுரையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுத் தாள்கள் திருத்தும் மையங்கள் மற்றும் அதற்கான பொறுப்பு அலுவலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

மதுரையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுத் தாள்கள் திருத்தும் மையங்கள் மற்றும் அதற்கான பொறுப்பு அலுவலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

   தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மார்ச் 4) முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இத்தேர்வை, மதுரை மாவட்டத்தில் 92 மையங்களில் 37,683 பேர் எழுதுகின்றனர். அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது.

   பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், மதுரை கல்வி மாவட்டத்தில் திருநகர் சீதாலட்சுமி மேல்நிலைப் பள்ளியிலும், மேலூர் கல்வி மாவட்டத்துக்கு யானைமலை ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்துக்கு கருமாத்தூர் புனித கிளாரெட் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகின்றன.

  பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களாக, மதுரை கல்வி மாவட்டத்துக்கு ஞானஒளிவுபுரம் செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியும், மேலூர் கல்வி மாவட்டத்துக்கு திருப்பாலை வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியும், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்துக்கு திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

  விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, கல்வி மாவட்ட அலுவலர்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.