சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நோட்டாவுக்கு தனி சின்னம் தேவையற்றது:ஹெச்.ராஜா

நோட்டாவுக்கு என தனி சின்னம் தேவையற்றது என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்தார்,

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

நோட்டாவுக்கு என தனி சின்னம் தேவையற்றது என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்தார்,

 சென்னையிலிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:   தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறோம். தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளது. நோட்டாவுக்கு என தனியாக சின்னம் தேவையில்லாதது.

நோட்டாவிற்கு வாக்களிப்பது ஜனநாயகக் கடமையை ஆற்றாததற்குச் சமம். கட்சிகள் பிடிக்கவில்லை எனில் வேட்பாளர்களைப் பார்த்தாவது வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் கூட்டணி குறித்து கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் பேசிக்கொண்டிருக்கிறார். கூட்டணி குறித்து தேசியத் தலைமை அறிவிக்கும். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசு நீதிமன்ற நடைமுறையை பின்பற்றும் என்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவருக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.