தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டாலே நகரமே களைகட்டத் தொடங்கிவிடும் தெருவுக்கு தெரு வேட்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டிபோட்டு பிரசாரம் செய்துவரும் நிலையில் தேர்தலில் போட்டியிட்டும் பிரசாரம் செய்யாமல் உள்ளார் சிவகாசியில் சுயேச்சையாக போட்டியிடும் தியாகராஜன் என்கிற யோகநாடார் (70).
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தந்தை துரைப்பாண்டியநாடார் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அவரது இறப்புக்கு பிறகு தாய் பஞ்சவர்ணம்மாளுக்கு சேரவேண்டிய கருணைத்தொகை வரவில்லை. இதுகுறித்து பல அதிகாரிகளை சந்தித்தும் பலன்இல்லை. அப்போது சென்னையில் ஒரு அதிகாரி கூறிய யோசனைப்படி 1989இல் சிவகாசியில் சுயேச்சையாக வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு, எனது தாயாருக்கு கருணைத்தொகை வழங்காவிட்டால் தேர்தலை நிறுத்தக்கோரி வழக்குத் தொடருவேன் எனக் கூறினேன். இதையடுத்து 8 நாளில் கருணைத்தொகை வந்துவிட்டது.
ஆகவே, சுயேச்சையாக போட்டியிட்டால் தான் அரசு தனது கடமையை செய்யும் என உணர்ந்தேன். 1989இல் போட்டியிட்டபோது 102 வாக்குகள் வாங்கினேன். அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் சைக்கிளில் சென்று மனுதாக்கல் செய்துவிட்டு வந்ததோடு சரி. எந்த பிரசாரமும் செய்யவில்லை. துண்டு பிரசுரமும் வழங்கவில்லை டெபாசிட் தொகை செலுத்தியதோடு சரி,வேறு எந்த செலவும் செய்வதில்லை.
இதேபோல், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை பெற்றுள்ளேன். இதுவரை 10 தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். எந்த தேர்தலிலும் எந்த கட்சியினரும் இதுவரை வாபஸ் வாங்கு என மிரட்டியதில்லை. இறுதி வரை நடைபெறும் தேர்தல்களிலும் போட்டியிடுவேன் என்றார் அவர்.
-எஸ். பாலசுந்தரராஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

மழையூரில் நாம் தமிழா் கட்சி பிரசார வாகனம் தீக்கிரை

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முதலில் நிறைவேற்றியவா் ஸ்டாலின்: கி. வீரமணி

விடுபட்ட பணிகள் தொடர வாக்களியுங்கள்: அமைச்சா் கோவி. செழியன் பிரசாரம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


