மசாஜ் நிலைய உரிமையாளரை அரிவாளால் வெட்டி பணம், செல்லிடப்பேசிகள் பறிப்பு
மதுரையில் மசாஜ் நிலைய உரிமையாளரை அரிவாளால் வெட்டி பணம், செல்லிடப்பேசிகள் மற்றும் ஏடிஎம் மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மதுரையில் மசாஜ் நிலைய உரிமையாளரை அரிவாளால் வெட்டி பணம், செல்லிடப்பேசிகள் மற்றும் ஏடிஎம் மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், ரெங்கபாளையத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் லிஜின் (22). மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் எதிரில் மசாஜ் நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில், மசாஜ் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த மர்ம நபர்கள் 4 பேர், லிஜினிடம் பணம் கேட்டுள்ளனர்.
அவர் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை அரிவாளால் வெட்டி, மசாஜ் நிலையத்திலிருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள 4 செல்லிடப்பேசிகள் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம், வங்கி ஏடிஎம் அட்டை ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த லிஜின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக லிஜின் அளித்த புகாரின்பேரில், கோ.புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...