மின்சாரம் பாய்ந்து பஞ்சர் கடை உரிமையாளர் சாவு
மதுரை அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து பஞ்சர் கடை உரிமையாளர் உயிரிழந்தார்.


மதுரை அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து பஞ்சர் கடை உரிமையாளர் உயிரிழந்தார்.
மதுரை விரகனூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நீலமேகம் (32). இவர், அதே பகுதியில் டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், கடையில் டயருக்கு பஞ்சர் ஒட்டும் வேலையில் நீலமேகம் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது, பஞ்சர் ஒட்டும் இயந்திரத்தை இயக்கியதில், நீலமேகம் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். தகவலின்பேரில் கடைக்குச்சென்ற நீலமேகம் குடும்பத்தினர், அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு நீலமேகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து நீலமேகத்தின் மனைவி வள்ளி அளித்த புகாரின்பேரில், சிலைமான் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...