தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பேராசிரியையை கத்தியால் குத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையை கத்தியால் குத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:00 am

DIN

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையை கத்தியால் குத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பேராசிரியையயாக  பணிபுரிந்து வருபவர் ஜெனிபா (39). இவரது துறையில் தாற்காலிக விரிவுரையாளராகப் பணிபுரிந்த ஜோதிமுருகன் (32), முன்விரோதம் காரணமாக ஜெனிபாவை அண்மையில் கத்தியால் குத்தினார். இதுதொடர்பாக நாகமலைபுதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜோதிமுருகனை கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜோதிமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஊரகக்கண்காணிப்பாளர் மணிவண்ணன் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் போலீஸார் ஜோதிமுருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.