கார் மோதி புகைப்பட கலைஞர் சாவு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்ற புகைப்பட கலைஞர் மீது கார் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்ற புகைப்பட கலைஞர் மீது கார் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வாவிட மருதூரைச் சேர்ந்தவர் பெரியபுலியான் (43). புகைப்பட கலைஞர். இவர் நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுத்து விட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மதுரை -திண்டுக்கல் நான்குவழிச்சாலையில் தனிச்சியம் பிரிவில் இறங்கி சாலையைக் கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கலில் இருந்து மதுரைக்குச் சென்ற கார் பெரியபுலியான் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெரியபுலியான் சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவம் தொடர்பாக பெரியபுலியான் மனைவி சரஸ்வதி அளித்தப் புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸார், கார் ஓட்டுநர் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த சங்கரராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com