தென்கால் கண்மாய்க்கு வைகை தண்ணீர் திறக்க பாஜக கோரிக்கை

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய்க்கு வைகை தண்ணீர் திறந்து விடவேண்டும் என  பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Updated on
1 min read

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய்க்கு வைகை தண்ணீர் திறந்து விடவேண்டும் என  பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் பாஜக மண்டல் செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதில் மண்டல்தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் சசிராமன், பொதுச்செயலர் பாலகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியேர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்,திருப்பரங்குன்றம் மூலக்கரை அருகே விபத்துக்களை தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும். வழிப்பறி,நகைபறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்க முக்கியமான சாலைசந்திப்புகளில் கேமராக்கள் பொருத்த வேண்டும். திருப்பரங்குன்றம், அவனியாபுரம் விவசாயிகள் பாசனத்திற்காக தென்கால் கண்மாய்க்கு வைகையிலிருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என்பது
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com