மதுரையில் தொடர் திருட்டு: இளைஞர் கைது

மதுரை தெற்குவாசல் பகுதியில் பூட்டிய கடை மற்றும் வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு தொடர் திருட்டு நடந்து வந்தது. இதுதொடர்பாக தெற்குவாசல்
Updated on
1 min read

மதுரை தெற்குவாசல் பகுதியில் பூட்டிய கடை மற்றும் வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு தொடர் திருட்டு நடந்து வந்தது. இதுதொடர்பாக தெற்குவாசல் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில் மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரத்தைச் சேர்ந்த அஸார் (21) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீஸார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் தெற்குவாசல் பகுதியில் 6 கடைகளில் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் பணத்தைத் திருடியது தெரிந்தது. மேலும் பூட்டிய வீடுகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலீஸார் அஸாரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com