உசிலை. அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் சாவு
உசிலம்பட்டி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.


உசிலம்பட்டி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
உசிலம்பட்டி வட்டம், போலிபட்டியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன் என்பவரது மனைவி கவிதா (27). இவர், கடந்த 4 நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். காய்ச்சல் குறையாததால், செவ்வாய்கிழமை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. அதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...