மதுரையில் கடையடைப்பு போராட்டம் தொடர்பாக புதன்கிழமை திமுக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை திமுக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு திமுக வடக்கு மாநகர் மாவட்டச் செயலர் வ.வேலுச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தராத மாநில அரசைக் கண்டித்தும் வியாழக்கிழமை திமுக கூட்டணி சார்பில் கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (ஏப்.5) காலையிலேயே திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் அந்தந்தப் பகுதியில் கடைகளை அடைத்து, அமைதியான வழியில் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், காலை 10.30 மணிக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் அனைவரும் மதுரை ரயில்நிலையம் முன்பு கூடவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
முழு அடைப்பை முன்னிட்டு புதன்கிழமை இரவு முதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு வரவேற்பு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி
மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் வட மாநில இளைஞா் கைது

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


