“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

சிறையில் கஞ்சா பதுக்கிய கைதி மீது வழக்கு

மதுரை மத்திய சிறையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கைதி மீது, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:31 am

மதுரை மத்திய சிறையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கைதி மீது, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
     மதுரை மத்திய சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை சில கைதிகள் பயன்படுத்துவதாக, சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறை அதிகாரிகள், கைதிகள் அறையில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரை ஆனையூரைச்  சேர்ந்த நாராயணன் ( 45) என்ற கைதி அறையில் சோதனையிட்ட போது,  கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.      உடனே, அந்த கஞ்சாவை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து சிறை அதிகாரி உதயகுமார் அளித்த புகாரின்பேரில், கைதி நாராயணன் மீது சிறை நன்னடத்தை விதிகளை மீறியதாக, கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.