திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

மதுரை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:08 am IST

மதுரை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 மதுரை அருகே உள்ள சிலைமான் எஸ்.புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தன்னுடைய வீட்டில் திங்கள்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த ஒரு நபர், அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். இதையடுத்து அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்து வந்தனர்.
 இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து இளம்பெண்ணின் தாயார் அளித்த புகாரின்பேரில் சிலைமான் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றது, அதே பகுதியைச் சேர்ந்த மகாபிரபு (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் மகாபிரபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.