நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

உசிலம்பட்டியில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சிய20 மின் மோட்டார்கள் பறிமுதல்

உசிலம்பட்டியில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 20 மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:09 am IST

உசிலம்பட்டியில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 20 மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகத்தினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். 
 உசிலம்பட்டி நகராட்சியில் 5 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அப்போது சட்ட விரோதமாக மின்மோட்டார்களை பயன்படுத்தி நீர் உறிஞ்சப்படுவதால் மற்ற பகுதிக்கு குடிநீர் சீராக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுபோன்ற புகார்கள் நகராட்சி ஆணையருக்கு வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் சுப்பையா உத்தரவின்
பேரில், பொதுப்பணி மேற்பார்வையாளர் கணேசன், பிட்டர் கதிரேசன் உள்ளிட்டோர் நகர் பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது கருக்கட்டான்பட்டி காலனி, மலையாண்டி தியேட்டர் பகுதிகளில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 20 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.