உசிலம்பட்டி அருகே வீட்டில் 150 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
உசிலம்பட்டி வட்டம், கீரிப்பட்டியில் உள்ள ஒரு வீட்டின் பின்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக உசிலம்பட்டி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சார்பு-ஆய்வாளர் சண்முகபாண்டியன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக பெரியகருப்பன் மகன் வங்காரு (எ) சிவாவை (23) கைது செய்தனர். இந்த வழக்கில் தப்பியோடிய நிவாஸை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







