செல்லிடப்பேசி தொலைந்ததால் விஷம் குடித்து இளைஞர் சாவு

செல்லிடப்பேசி தொலைந்த துக்கம் தாளாமல் இளைஞர் விஷமருந்தி உயிரிழந்தார். 
Updated on
1 min read

செல்லிடப்பேசி தொலைந்த துக்கம் தாளாமல் இளைஞர் விஷமருந்தி உயிரிழந்தார். 
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சதன் என்கிற பாரதி (18). மதுரை மாவட்டம் ஊமச்சிகுளத்தில் உள்ள போர்வெல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், சமீபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புதிய செல்லிடப்பேசி வாங்கியுள்ளார். ஆனால், சில நாள்களுக்கு முன் அதை தொலைத்துவிட்டாராம். 
இதனால், பெற்றோர் பாரதியை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், தான் பணிபுரியும் இடத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து வெள்ளைச்சாமி அளித்த புகாரின்பேரில், ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com