தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அட்டாக் பாண்டி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

அட்டாக் பாண்டி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சனிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:26 am

DIN

அட்டாக் பாண்டி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சனிக்கிழமை உத்தரவிட்டது.
      திமுக செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டு சுரேஷ் கடந்த 2013-இல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக் குழு முன்னாள் தலைவர் அட்டாக் பாண்டி முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை 2015 ஆம் ஆண்டு மும்பையில் வைத்து போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 
இந்நிலையில், அவர் பல்வேறு காரணங்களைக் கூறி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி 4 முறை மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுக்கள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. 
இந்நிலையில், ஐந்தாவது முறையாக அவர் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.