சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

தடகளம்:  பதக்கம் வென்ற தென்மண்டல காவல் துறையினருக்கு பாராட்டு

திருச்சியில் நடைபெற்ற காவல்துறையினருக்கான தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற தென்மண்டல காவல்துறையினருக்கு, மதுரை மாநகரக் காவல்

Updated On :2 ஆகஸ்ட் 2018, 7:44 am IST

திருச்சியில் நடைபெற்ற காவல்துறையினருக்கான தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற தென்மண்டல காவல்துறையினருக்கு, மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டுத் தெரிவித்தார்.
 திருச்சியில் ஜூலை 27 முதல் 29-ஆம் தேதி வரை மாநில அளவிலான காவல்துறை தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மதுரை மாநகர் கோ.புதூர் காவல் நிலைய தலைமைக் காவலர் சிதம்பரம், 400 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம்,
நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். யோகா பிரிவில் மதுரை மாநகர ஆயுதப்படை முதல்நிலைக் காவலர் பாண்டிச்செல்வம் தங்கம் வென்றார்.
குழுவாக தடைதாண்டும் ஓட்டத்தில் கோ.புதூர் தலைமைக் காவல் சிதம்பரம்,  முதல்நிலைக் காவலர் ஜெயச்சந்திரபாண்டி, காவலர்கள் தினேஷ்குமார், ராஜேந்திரபிரசாத், மணிவாசகம் (திண்டுக்கல் மாவட்டம்), ரஞ்சித்குமார், முகமது ரபி  (சிவகங்கை மாவட்டம்) ஆகிய 8 பேர் கொண்ட தென்மண்டல அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் புதன்கிழமை வாழ்த்துத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.