சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பிறப்பு, இறப்பு பதிவேடுகளை கணினியில் பதிவேற்றிட உத்தரவு

மதுரை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை கணினியில் பதிவேற்றம் செய்து பாதுகாக்க ஆணையர் அனீஷ்சேகர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 7:42 am IST

மதுரை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை கணினியில் பதிவேற்றம் செய்து பாதுகாக்க ஆணையர் அனீஷ்சேகர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (மேற்கு) அலுவலகத்தில் ஆணையர் அனீஷ்சேகர் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வரிவசூல் மையம், பொதுப் பிரிவுகளில் பணியாளர்கள் வருகை பதிவு ஆவணங்களை ஆய்வு செய்தனர். 
மேலும், பணியாளர்களின் தன்பதிவேடு, இயக்கப் பதிவேடு, விடுப்புகள் விவரம், அனுமதி விடுப்பு விவரங்கள் அடங்கிய பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியாளர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளுக்கு வெளியில் செல்லும் போது அதை இயக்கப் பதிவேட்டில் முறையாக எழுதி பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மண்டல அலுவலக பதிவேடு பராமரிப்பு அறைக்குச் சென்ற ஆணையர், அங்கிருந்த ஆவணப்பதிவேடுகளை எடுத்து பார்த்து அலுவலர்களிடம் விவரம் 
கேட்டார். பணிமுடிந்த கோப்புகளையும், தணிக்கைக்கு உள்பட்ட கோப்புகளையும் ஆய்வு செய்தார்.
ஆவணக்காப்பறையில் தேவையின்றி குவிந்திருந்த உடைந்த தளவாடச் சாமான்களை அப்புறப்படுத்த உத்தரவிட்ட ஆணையர், விண்ணப்பித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கோப்புகளையும் ஆய்வு செய்து விவரங்களைக் கேட்டறிந்தார். 
பிறப்பு, இறப்பு சான்றுகளுக்கான மனுக்கள், கோப்புகளை கணினியில் பதிவேற்றம் செய்து பாதுகாக்கவும் ஆணையர் உத்தரவிட்டார். 
மண்டல அலுவலக ஆய்வுக்குப்பின்னர் எல்லீஸ்நகர் பகுதியில் பூங்கா அமைக்கும் பணியையும், எஸ்.பி.ஓ. காலனியில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். 
ஆணையருடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.மணிவண்ணன், மக்கள் தொடர்பு அலுவலர் என்.சித்திரவேல், உதவி 
செயற்பொறியாளர் முருகேசபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.