மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகளில் தடுப்பணை கட்டக் கோரிய வழக்கு: பொதுப்பணித்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகும் நதிகளில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில்

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகும் நதிகளில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக பொதுப்பணித்துறைச் செயலர், தலைமைப் பொறியாளர் ஆகியோர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனு:
 நாடு முழுவதும் செழிக்க அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் விவசாயம் நலிவடைந்துள்ளது. 
 இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் நாங்கள் பயணம் செய்தோம். அப்போது ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எங்களிடம் அளித்தனர். அதில்  நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் ஓவேலி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் செல்கிறது. இந்த ஆற்றில் தோவாலா என்ற இடத்தில் 15 சிறிய நதிகள் ஒன்று சேருகின்றன.  பருவமழை காலங்களில் இந்த ஆறுகளில் 166 முதல் 180 டி.எம்.சி. தண்ணீர் வரை வீணாகச் செல்கிறது. இந்த தண்ணீர் தமிழகத்தில் 15 கி.மீ. தூரம் ஓடி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சாலியாற்றில் இணைந்து அரபிக் கடலில் வீணாக கலக்கிறது. தடுப்பணைகள் கட்டி இந்த தண்ணீரை பவானி சாகர் அணைக்கு கொண்டு சென்றால் ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பயன்படுத்தலாம். 
இதேபோல நெல்லை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கருப்பா நதி, செண்பகவல்லி நதி, வலைமலையாறு, கோட்டை மலையாறு தண்ணீரும் அரபிக் கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த ஆறுகளில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்தால் நெல்லை, தூத்துக்குடி,  விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களின்  விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.
மேலும் கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆனைமலையாறு,  இட்லியாறு தண்ணீரை ஆழியாறு அணைக்குத் திருப்பினால் கோவை பகுதியில் விவசாயம் அதிகரிக்கும்.  ஈரோடு மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் மணியாச்சி ஆற்றில் அணை கட்டினால் வறட்டுப்பள்ளம் அணைக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். காவிரியில் கிடைக்கும் கூடுதல் தண்ணீரை கோமாளிக்காட்டுகொம்பு பகுதியில் திசை திருப்பினால் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
 எனவே மேற்கண்ட ஆறுகளில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க உரிய இடங்களில் அணைகள், தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், என். சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதிகள்,  மனுவுக்கு தமிழக பொதுப்பணித்துறை செயலர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், நீர்வள ஆதார அமைப்பின் திட்ட உருவாக்க தலைமைப் பொறியாளர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.