திமுக தலைவர் மு.கருணாநிதி இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மதுரை திமுக நிர்வாகியின் குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி, ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
மதுரை கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (55). இவர் மதிச்சியம், இரண்டாம் பகுதி திமுக துணைச் செயலராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.கருணாநிதி இறந்ததை அடுத்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி சென்றார். சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி துரை உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையொட்டி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை வந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கோமதிபுரத்தில் உள்ள துரையின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார்.
அங்கு துரையின் படத்துக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் திமுக மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









