உசிலம்பட்டியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை பணியை புறக்கணித்து மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய மனித சங்கிலி போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து பேருந்து நிலையம் நுழைவு வாயில் வரை கைகோர்த்து நின்றனர். பின்னர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கோட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், கோட்ட செயலர் பிரசன்னா ஆகியோர் தலைமை வகித்தனர். வட்ட தலைவர் ரம்யா, வட்ட செயலர் சசிக்குமார், வட்ட பொருளாளர் முத்துமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூர், கள்ளிக்குடி ஆகிய 4 தாலுகாக்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பத்மநாதன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்டேட் தொழிலாளா் குடியிருப்புகளுக்கு நடுவே இரவில் நடந்து சென்ற யானை

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு போலீஸில் பெண் புகாா்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு! கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக, புதுச்சேரி மீனவா்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


