கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் அனைத்துத் தேவாலயங்களிலும் திங்கள்கிழமை நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு கூட்டுத் திருப்பலியுடன் நடைபெற்றது.
மதுரை கீழவெளி வீதி தூய மரியன்னை ஆலயம், டவுன்ஹால் சாலை புனித ஜெபமாலை அன்னை தேவாலயம், பழங்காநத்தம் புனித அந்தோணியார் ஆலயம், கோ.புதூர் லூர்து அன்னை ஆலயம், நரிமேடு சிஎஸ்ஐ கதீட்ரல் தேவாலயம், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள பரிசுத்த மீட்பர் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
போலீஸ் பாதுகாப்பு: நள்ளிரவு பிரார்த்தனையில் பங்கேற்கும் கிறிஸ்தவர்களிடம் நகைபறிப்பு, வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் விதமாகவும், அசம்பாவிதங்களை தடுக்கவும் மதுரை மாநகரில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம், அண்ணா பேருந்து நிலையம், கோரிப்பாளையம், தெற்குவாசல், கீழவாசல், கோ.புதூர், மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் அந்தந்த பகுதி போலீஸார் கண்காணிப்பு, ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.25,000 வரை கல்வி உதவித் தொகை.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!

தக்கோலம் அகோர வீரபத்திர சுவாமி கோயிலில் ஜூன் 7-ல் கத்திரி பூஜை நிறைவு விழா!

ரூ. 50 கோடி வசூலித்த பிளாஸ்ட்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


