பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

கிராம நிர்வாக அலுவலர்கள் மனித சங்கிலி - ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை பணியை புறக்கணித்து மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:19 am IST

உசிலம்பட்டியில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை பணியை புறக்கணித்து மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய மனித சங்கிலி போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து பேருந்து நிலையம் நுழைவு வாயில் வரை கைகோர்த்து நின்றனர். பின்னர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கோட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், கோட்ட செயலர் பிரசன்னா ஆகியோர் தலைமை வகித்தனர். வட்ட தலைவர் ரம்யா, வட்ட செயலர் சசிக்குமார், வட்ட பொருளாளர் முத்துமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உசிலம்பட்டி, திருமங்கலம், பேரையூர், கள்ளிக்குடி ஆகிய 4 தாலுகாக்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பத்மநாதன்  நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.