மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில், சங்கத் தலைவர் எஸ்.பி. ஜெயப்பிரகாசம், கௌரவச்செயலர் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கர் ஆகியோர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். கோபாலகிருஷ்ணனுடன் புதுதில்லி சென்று, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை அண்மையில் சந்தித்தனர்.
அப்போது அவர்கள், மதுரை - சென்னைக்கு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தேஜஸ் ரயிலை பயணிகளின் வசதிக்காக திண்டுக்கல்லில் நிறுத்தவேண்டும். மதுரை - பெங்களூரு இடையே பகல் நேர ரயில் இயக்கவேண்டும். மதுரை -கோவை இடையே இருமார்க்கத்திலும் இரவு நேர ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதேபோல், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெகதீஷ் நட்டாவையும் சந்தித்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ. 1,264 கோடி நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தில் உள்ள குறைகளை களையக் கோரியும் மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







