திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

ஹெச்ஐவி பாதித்த பெண்ணுக்கு அமைச்சர் ஆறுதல்

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று

Updated On :31 டிசம்பர் 2018, 8:58 am IST

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வரும்  சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். 
 மேலும் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சத்தை வழங்கினார்.
பின்னர்  செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:  பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தங்கப்பாண்டி, சாத்தூர் படந்தாலில்  அரசு நிலம் வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தார்.  
இதுதொடர்பாக விருதுநகர் ஆட்சியரிடம் உடனடியாக பேசி அவர் கேட்ட இடமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவுடன் அந்த பெண்ணின் கணவருக்கு ஓட்டுநர்  வேலையும், பெண்ணுக்கு தகுந்த வேலையும் வழங்கப்படும் என்றார். 
மருத்துவமனை முதல்வர் எஸ்.சண்முகசுந்தரம், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.