தமிழக கோயில்களுக்கான சொத்துகள், பொருள்கள், சிலைகளை கணக்கெடுக்க இந்து பெரியவர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் பொன்விழா ஆண்டு மாநில மாநாடு மதுரை கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் மாநிலத் தலைவர் தெய்வபிரகாசம் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் சுடலைமணி முன்னிலை வகித்தார்.
மாநாட்டில், இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் 50 ஆவது பொன்விழா ஆண்டு மலரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுப் பேசியது: இந்து ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்து ஆலய பாதுகாப்பு குழு தொடங்கப்பட்டது.
1967-க்கு முன்பு நீதிக்கட்சியின் ஆட்சி காலத்தில் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் சொத்துகளையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் இந்து மதத்தை தவிர பிற மதத்தவர்கள் தங்கள் சொத்துக்களை, வழிபாட்டு தலங்களை நாங்களே பாதுகாத்து கொள்கிறோம் என்று வழக்குத்தொடர்ந்து அரசுக்கு எதிரான முடிவுக்கு வந்து விட்டார்கள்.
ஆனால் இந்து சமயத்தவர்கள் மட்டும் ஆலயங்களையும், கோயில் சொத்துகளையும் அரசுக்கு கொடுத்து விட்டனர். அதன் காரணமாக 1986-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள மொத்த கோயில் நிலங்கள் 5.25 லட்சம் ஏக்கராக இருந்தது.
அந்த சொத்துகள் 30 ஆண்டுகள் கழித்து 2017-இல் 4.78 லட்சம் ஏக்கர் மட்டுமே உள்ளது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் கணக்கில் வராமல் போய்விட்டது. இந்த 50 ஆயிரம் ஏக்கர் நிலம் எங்கே போனது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களுக்கான சொத்துக்கள், பொருள்கள், சிலைகளை கணக்கெடுக்க அந்தந்த பகுதி இந்து பெரியவர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். சிலை மீட்புக்குழு பொன்.மாணிக்கவேலுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
மாநாட்டில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் மணியன், சின்மயா மிஷனை சேர்ந்த சுவாமி சிவயோகானந்தா உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைவு! எவ்வளவு தெரியுமா?

காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!
அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! ஸ்பீக்கர் ஒலிக்குத் தடை! முக்கிய அறிவிப்பு

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும்! திருச்சி சிவா
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


