காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மதுரையில் பிளாஸ்டிக் தடையை கண்காணிக்க குழுக்கள்

மதுரையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை அடங்கிய

Updated On :31 டிசம்பர் 2018, 8:53 am IST

மதுரையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்  பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்க்கவும், கடைகள், உணவகங்கள், விற்பனையாளர், காய்கறிச்சந்தை உள்ளிட்ட பிற இடங்களில் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்ய வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை ஆகிய துறைகளில் இருந்து மூவர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த குழுக்கள் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்களின் உறுப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. 
 மேலும் குழு உறுப்பினர்களுக்கு பறிமுதல் செய்யப்படக் கூடிய பொருள்கள் பற்றி விளக்கப்பட்டது.  இக்குழுக்கள் சிறப்பாக பணியாற்றி பிளாஸ்டிக் மாசில்லா மதுரையை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். 
கூட்டத்தில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர் விஜயபாஸ்கரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராம்மோகன்,  மாநகராட்சி துணை ஆணையர் மணிவண்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.