தண்ணீர் லாரி மீது மோதிய கார் எரிந்து நாசம்: உயர்கல்வித்துறை அதிகாரி உள்பட மூவர் காயம்

மதுரை அருகே ஒத்தக்கடையில் தண்ணீர் லாரியும் காரும் மோதிய விபத்தில் உயர் கல்வித்துறை அதிகாரி உள்பட மூவர் பலத்த காயமடைந்தனர். விபத்தில் கார், லாரி எரிந்து நாசமானது.
Updated on
1 min read

மதுரை அருகே ஒத்தக்கடையில் தண்ணீர் லாரியும் காரும் மோதிய விபத்தில் உயர் கல்வித்துறை அதிகாரி உள்பட மூவர் பலத்த காயமடைந்தனர். விபத்தில் கார், லாரி எரிந்து நாசமானது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் அசோக்குமார்  (27) . உயர்கல்வித்துறையில் முனைவர் பட்ட ஆய்வு சரிபார்ப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அசோக்குமார், அவரது நண்பர்கள் சென்னை சாத்தனூரைச் சேர்ந்த நிவேதா (26), பாலச்சந்திரன் ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை இரவு காரில் திருவனந்தபுரம் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலையில் கார் ஒத்தக்கடை அருகே உள்ள மலையாளத்தான்பட்டி விலக்கில் வந்து கொண்டிருந்தது. அப்போது மலையாளத்தான்பட்டியில் இருந்து தண்ணீர் கொண்டு சென்ற லாரியும், காரும் மோதிக்கொண்டன. 
இதில் காரில் இருந்த அசோக்குமார், நிவேதா, பாலச்சந்திரன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் அப்பகுதியினரால் மீட்கப்பட்டனர். இதில் காரின் ரேடியேட்டர் வெடித்ததில் காரில் தீப்பற்றியது. காரில் பற்றிய தீ  லாரிக்கும் பரவியதில் கார், லாரி இரண்டும் தீப்பற்றி எரிந்தன.
தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்குச்சென்றனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்தது. இதையடுத்து லாரியில் பற்றிய தீயை அணைத்தனர். சம்பவம் தொடர்பாக ஒத்தக்கடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com