சாலை மேம்பாடும், உள்கட்டமைப்பு வசதிகளுமே நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 8 சாலைகளின் மேம்பாட்டுப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை- நத்தம் பறக்கும் மேம்பாலம், மதுரையிலிருந்து தனுஷ்கோடிக்கு புதிய சாலை, மேலூரிலிருந்து தஞ்சைக்கு 8 வழிச்சாலை என பல சாலை வசதிகள் உருவாக்கப்படவுள்ளன. சாலை வசதிகளால் மதுரை பகுதியில் புதிய தொழிற்சாலைகள் உருவாகும் நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சாலை பயன்பாட்டை முழுமையாக அறிந்து கொள்ளாமல் சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்ப்பது சரியல்ல. சாலை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என நீதிமன்றம் அறிவுரை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
நிகழ்ச்சியில் சிவரக்கோட்டை-சென்னம்பட்டி, மருதங்குடி-திருமால், வடக்கம்பட்டி-புளியம்பட்டி ஆகிய தார்ச்சாலைப் பணிகளையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். மேலும், நெடுங்குளம், டி.புதூர், டி.கொக்குளம் ஆகிய பகுதி சாலைகள், எஸ்.கிருஷ்ணாபுரம் முதல் பாறைக்குளம் வரையிலான சாலை மற்றும் திருமால் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கான கூடுதல் கட்டடம் என மொத்தம் ரூ.8.69 கோடி மதிப்பிலான பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் முருகேசன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது: சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

