மதுரையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை10) காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பங்கேற்கிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் வீ.கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பங்கேற்கிறார். அப்போது வாக்குச்சாவடி வாரியாக நிர்வாகிகளை மாநிலத் தலைவர் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு, மகிளா காங்கிரஸ், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு, மனித உரிமை பிரிவு, சேவாதளம், பட்டதாரிகள் பிரிவு மற்றும் கட்சியின் நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

