அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பேரவைக் கூட்டம்

மதுரையில் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க மூன்றாவது மாநிலப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 5:54 am IST

மதுரையில் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க மூன்றாவது மாநிலப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, பேரவைத் தலைவர் ப. நீதிமணி தலைமை வகித்தார். பொதுச்செயலர் எல். சீனிவாசன் செயல் அறிக்கையும், பொருளாளர் கோ. முருகன் நிதி நிலை அறிக்கையையும் வாசித்தனர்.
இதில், தமிழ்நாடு அரசுஅலுவலர் கழகம் (சி அண்ட் டி) மாநிலத் தலைவர் பி. செளந்திரராஜன் சிறப்புரையாற்றினார். புதிய நிர்வாகிகளை எம்.வி. பால்ராஜ் அறிமுகப்படுத்திப் பேசினார். 
கூட்டத்தில், கல்வித் துறையில் அமைச்சுப் பணியாளர்களுக்கு துணை, இணை இயக்குநர் பதவியை அரசாணைப்படி வழங்கவேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பணிகளில் உதவிட நிதிக் காப்பாளர் நிலையில் நேர்முக உதவியாளர் பணியிடத்தை ஏற்படுத்தவேண்டும். கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஏனைய துறைகளில் உள்ளதுபோல தர ஊதியம் வழங்கவேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் என்ற பதவிப் பெயரை நேர்முக அலுவலர் என மாற்றிடவும், நிதி அதிகாரத்துடன் அப்பதவியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கப் பேரவையின் நிர்வாகிகள் சாமி சத்தியமூர்த்தி,  மதுரை பாஷா, சோணை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.