மதுரையில் மண்டலம் 4 (தெற்கு) அலுவலக வளாகத்தில் ஜூலை 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அனுமதியற்ற மனைப் பிரிவுகளின் தனிமனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சி எல்லைக்குள் 100 வார்டுகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவினை வரன்முறைப்படுத்தும் வகையில், சிறப்பு முகாம் மண்டலம் 4 (தெற்கு) அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று சம்பந்தப்பட்ட மனைகளை வரன்முறைப்படுத்தும் தொகையை செலுத்துவதற்கான உத்தரவுகளையும், வரன்முறைப்படுத்தியதற்கான உத்தரவுகளையும் பெறலாம்.
முகாமுக்கு வரும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மனைக்கான பத்திர நகல்கள், இணையதள கட்டணம் ரூ.500, வில்லங்கச் சான்று ஆகிய அனைத்தும் அடங்கிய கோப்புகள் இரண்டும், மேலும் சம்பந்தப்பட்ட மனைப் பிரிவுக்கான வரைபட நகல்கள் (லே-அவுட்) ஐந்தும் கொண்டுவரவேண்டும். சரியான ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
முகாமில் சம்பந்தப்பட்ட மனைக்கான தொகையை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது மனைக்கு சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.600 என கட்டணம் செலுத்தவேண்டும். முகாம் அன்றே கட்டணம் செலுத்துவோருக்கு வரன்முறைப்படுத்தி உத்தரவு வழங்கப்படும்.
வருங்காலங்களில் வரன்முறைப்படுத்தாத மனைகளுக்கு மாநகராட்சியால் கட்டட வரைபட அனுமதி வழங்கப்படமாட்டாது. எனவே, இந்த முகாமைப் பயன்படுத்தி, மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளின் உரிமையாளர்கள் தனிமனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹோட்டல் தீ விபத்து வழக்கு: சமையல்காரரின் பிணை மனு தள்ளுபடி

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள்: தெற்கு ரயில்வே-க்கு நீதிமன்றம் உத்தரவு

தலைமறைவான ஹோட்டல் கணக்காளா் நீதிமன்றத்தில் சரண்

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவு: குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


