பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து மூன்றாவது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்வதால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். சரக்கு வாகன போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும். லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஜூலை 20-ஆம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
இதையடுத்து நாடு முழுவதும் லாரிகள் இயங்க வில்லை. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் சரக்குப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதனால் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து குறைந்துள்ளது. தற்போது வேன் உள்ளிட்ட சிறிய சரக்கு வாகனங்களில் மட்டுமே காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், உருளைகிழங்கு, சோயாபீன்ஸ், பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பீன்ஸ் கிலோ ரூ. 40-இல் இருந்து ரூ.60 ஆகவும், பீட்ரூட் ரூ.40-இல் இருந்து ரூ.60 ஆகவும், கேரட் ரூ.30-இல் இருந்து ரூ.40 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், தோட்டக்காய்களான தக்காளி கிலோ ரூ.15-இல் இருந்து ரூ.35 ஆகவும், வெண்டைக்காய் ரூ.15-இல் இருந்து ரூ.30 ஆகவும், கத்திரிக்காய் ரூ.20-இல் இருந்து ரூ.40 ஆகவும், உருளைக்கிழங்கு ரூ.20-இல் இருந்து ரூ.30 ஆகவும், பட்டர் பீன்ஸ் ரூ.120-இல் இருந்து ரூ.180 ஆகவும் உயர்ந்துள்ளது.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து பாதியாக குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து தேவைக்கேற்ற வரத்து இல்லாததால் விலை உயர்ந்து வருகிறது. லாரிகளின் வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் காய்கறிகள் விலை தொடர்ந்து உயரும் அபாயம் இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதை தவிர்க்கும் நிலை இருப்பதாகவும் காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.95.27! 14 காசுகள் உயர்வு!

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா திரையில் தோன்றி நடித்த திரைப்படங்கள்!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


