மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பெண் கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மூலம் இழந்த ரூ.81 ஆயிரத்தை போலீஸார் இரண்டு மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஊரகக் காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்களுக்கு வரும் அறிமுகமில்லாத அநாவசிய செல்லிடப் பேசி அழைப்புகளில், கடன் அட்டை, வங்கி ஏடிஎம் அட்டை ஆகியவற்றின் ரகசிய எண்களை தெரிவிக்க வேண்டாம் என காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் ஜவஹர் நகரைச் சேர்ந்த ரமாதேவியின் செல்லிடப்பேசிக்கு வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி, அவரது கடன் அட்டை ரகசிய எண்களை பெற்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் கடன் அட்டை மூலம் ரூ.81,870-க்கு பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக ரமாதேவிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், இரண்டு மணி நேரத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரமாதேவியின் வங்கிக் கணக்கில் ரூ.81,870 திரும்பப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








