கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

உதவித்தொகை உயர்வு கோரிக்கை ஏற்பு: பயிற்சி, பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள்

Updated On :26 ஜூன் 2018, 7:40 am IST

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
 தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பட்ட மேற்படிப்பு மருத்துவர்களும், 2,500-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்களும் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களைத்தான்,  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு பயன்படுத்தி வருகிறது.  பயிற்சி மருத்துவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.14 ஆயிரமும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கு ரூ.26 ஆயிரமும் வழங்கப்படுகிறது.  ஆனால் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.26 ஆயிரமும், பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கு மாதம் ரூ.96 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 
 தமிழகத்தை தவிர இதர மாநிலங்கள் அனைத்திலும் கூடுதல் தொகை வழங்கப்படுகிறது. எனவே, தமிழகத்தில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் தலைமையில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, மாதாந்திர உதவித்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.