இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு: மதுரையில் 38,423 பேர் பங்கேற்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 1) தொடங்கும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மதுரை மாவட்டத்தில் 111 தேர்வு மையங்களில் 304 பள்ளிகளைச் சேர்ந்த 38,423 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.


தமிழகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 1) தொடங்கும் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மதுரை மாவட்டத்தில் 111 தேர்வு மையங்களில் 304 பள்ளிகளைச் சேர்ந்த 38,423 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் கல்வி மாவட்ட வாரியாக மதுரையில் 129 பள்ளிகளைச் சேர்ந்த 19216 பேரும், மேலூரில் 110 பள்ளிகளைச் சேர்ந்த 11279 பேரும், உசிலம்பட்டியில் 70 பள்ளிகளைச் சேர்ந்த 7928 பேரும் எழுதுகின்றனர். இதில் 1467 பேர் தனித்தேர்வர்கள்.
தேர்வெழுதுவோருக்கு 12 மையங்களில் இருந்து தேர்வுத்தாள்கள் 40 வழிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் தலா ஒரு கண்காணிப்பாளரும், கல்வித்துறை அதிகாரியும், கூடுதல்
அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அனைத்து மையங்களையும் கண்காணிக்க 10 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 2066 தேர்வறைக் கண்காணிப்பாளர்கள், 222 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் 2 தேர்வானது ஏப்ரல் 6 ஆம் தேதி நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 16 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தேர்வு மையங்கள் அமைந்துள்ள கல்வி நிலையங்களில் இடைவிடாத மின்சாரம் கிடைக்கும் வகையில் செயல்பட மின்வாரியப் பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் மையங்களுக்கு அருகே மாணவ, மாணவியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பெருக்கி உள்ளிட்டவை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்து, பிளஸ் 1 தேர்வுகள்: பிளஸ் 1 பொதுத் தேர்வானது மார்ச் 7 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வானது மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...