மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருப்பரங்குன்றம் கோயிலில் ஒலி மாசில்லா திட்டம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காகவும், கோயில் சுற்றுப்புறத்தைக் காக்கும் வகையிலும் ஒலி மாசில்லாத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக 

News image
Updated On :1 மார்ச் 2018, 4:14 am

தினமணி

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காகவும், கோயில் சுற்றுப்புறத்தைக் காக்கும் வகையிலும் ஒலி மாசில்லாத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக திருத்தொண்டர் சபைத் தலைவர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதியும், அவர்கள் கோயிலில் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்யும் வகையிலும் ஒலி, மாசில்லா திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, நீர்வழி மேலாண்மை, பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் மேம்பாடு, பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகனங்களின் ஒலி அளவைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவைகளை செயல்படுத்தி ஒலி, மாசில்லாத் திட்டம் உருவாக்கப்பட உள்ளது.
 இத்திட்டம் அறநிலையத்துறை, மாநகராட்சி, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் ஒத்துழைப்போடு விரைவில் செயல்படுத்தப்படும் என திருத்தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.