மதுரை நகரில் உயர்நிலை பாலங்கள் அமைக்க இந்திய கம்யூ. வலியுறுத்தல் 

மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உயர்நிலை பாலங்கள் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Updated on
1 min read

மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உயர்நிலை பாலங்கள் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சுப்பாராயன் தொடக்கி வைத்தார். மாநாட்டின் நோக்கங்கள் குறித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வி.அழகிரிசாமி விளக்கிப்பேசினார். மாநாட்டில் 18 மாவட்டக்குழு உறுப்பினர்களும், மாநகர் மாவட்டச் செயலராக எம்.சரவணனும் தேர்வு செய்யப்பட்டனர்.
 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும். நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த கோரிப்பாளையம், காளவாசல், அண்ணாநகர், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் உயர்நிலை பாலங்கள் அமைக்கவேண்டும்.
 இந்து அற நிலையத்துறைக்குச் சொந்தமான புதுமண்டபம், ராஜாமில் சாலை, கோயில்கள் ஆகியவற்றில் பல ஆண்டுகளாக கடைகள் வைத்திருப்பவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் மாற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com