மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

"நீட்' தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டம்: 26 பேர் கைது 

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (நீட்) எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 4:15 am

தினமணி

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (நீட்) எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
 நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துவது, நீட் தேர்வுப் பயிற்சி என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை தனியாருக்கு வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் புதன்கிழமை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நீட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இப் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.