மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

கூட்டுறவு சங்கத் தேர்தல்: 211 சங்கங்களுக்கு நிர்வாகக் குழு போட்டியின்றி தேர்வு: 19 சங்கங்களுக்கு ஏப்.2-இல் வாக்குப்பதிவு

கூட்டுறவு சங்கப் பதவிகளுக்கான முதல்கட்ட தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 211 சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் போட்டியின்றி

Updated On :29 மார்ச் 2018, 2:45 am

கூட்டுறவு சங்கப் பதவிகளுக்கான முதல்கட்ட தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 211 சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 19 சங்கங்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிகிறது. இதையொட்டி சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தலை, கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் நான்கு கட்டமாக நடத்துகிறது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின்கீழ் மொத்தம் 852 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் முதல்கட்டமாக 230 சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இப் பதவிகளுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 284 பேர் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் 359 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், 172 சங்கங்களின் நிர்வாகக் குழுவுக்கு நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் அதிகமாக வேட்பு மனுக்கள் பெறப்படாத நிலையில், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 இதைத் தொடர்ந்து 58 சங்கங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற வேண்டிய நிலையில், வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான புதன்கிழமை மேலும் பலர் மனுக்களை திரும்பப் பெற்றனர். இதன் காரணமாக முதல் கட்டத் தேர்தலில் மொத்தம் 211 சங்கங்களின் நிர்வாகக் குழு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 முதல் கட்டத் தேர்தலில் மொத்தம் 19 சங்கங்களைச் சேர்ந்த 209 உறுப்பினர் பதவிக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இப் பதவிகளுக்கு மொத்தம் 604 பேர் போட்டியிடுகின்றனர். ஏப்ரல் 3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்றைய தினமே தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கான கூட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 7 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக 206 சங்கங்களுக்கு ஏப்ரல் 7 ஆம் தேதி, 3-ஆம் கட்டமாக 194 சங்கங்களுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி, 4-ஆம் கட்டமாக 222 சங்கங்களுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.