மதுரையை அடுத்த சோளங்குருணி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 202 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 61 ஆயிரத்து 36 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வழங்கினார்.
இந்த முகாமில் ஆட்சியர் பேசியது: அம்மா திட்ட முகாம் மூலமாக இதுவரை 1 லட்சத்து 87 ஆயிரத்து 427 மனுக்கள் பெறப்பட்டு தகுதிவாய்ந்த 1 லட்சத்து 10 ஆயிரத்து 401 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. சமூக நலத்துறையின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.176 கோடி செலவில் 49 ஆயிரத்து 154 பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர். தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 1 லட்சத்து 77 ஆயிரத்து 161 பேருக்கு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற பல்வேறு துறைகளின் திட்டங்களை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 202 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 61 ஆயிரத்து 36 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சீா்காழி அருகே நுங்கு வியாபாரி கொலை

திருப்பதியில் பொன்னக்கால்வாய் உற்சவம்!
ஆசாத் மாா்க்கெட் கொள்ளை வழக்கில் தில்லி காவலா் கைது

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

