கார் மோதி கட்டடத் தொழிலாளி சாவு: இளைஞர் கைது
மதுரையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார். கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.


மதுரையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார். கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மதுரை திருப்பாலை பொறியாளர் நகர் 8-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ராஜபெருமாள் (39), கட்டடத் தொழிலாளி. இவர், சனிக்கிழமை இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். திருப்பாலை பெண்கள் கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜபெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக ராஜபெருமாள் மனைவி ஜெயத்திரு (35) அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மது போதையில் கார் ஓட்டிய ஊமச்சிகுளம்- கொடிமங்கலம் விலக்கைச் சேர்ந்த தினேஷ் (29) என்பவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...